நீராட சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்...!

நீராட சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்...!

திருகோணமலை - செல்வநாயகபுரம் பகுதியில் உள்ள குளத்திற்கு நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் திருகோணமலை அன்புவளிபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்