அமெரிக்காவில் காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் உயிரிழப்பு

அமெரிக்காவில் காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் உயிரிழப்பு

அமெரிக்காவின் செனட் சபை அமைந்துள்ள கெபிட்டல் கட்டிடத்திற்கு தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடனின் பதவிப்பிரமாண நிகழ்வு வரை தலைநகர் வொஷிங்டனில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால நிலை பிரகடனத்தை மேலும் 15 நாட்களுக்கு நீடிப்பதற்கும் நடவடிககை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டொனல்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் செனட் சபை அமைந்துள்ள கெபிட்டல் கட்டிடத்திற்குள் அத்துமீறி பிரவேசிப்பதற்கு முயற்சித்த நிலையிலேயே அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்வினை உறுதிபடுத்துவதற்காக இடம்பெற்ற ஒன்றுகூடலுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையிலேயே டொனல்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் இவ்வாறு செயற்பட்டுள்ளனர்.