குடிபோதையில் தந்தையை கொலை செய்த மகன்..!

குடிபோதையில் தந்தையை கொலை செய்த மகன்..! கஹவத்தையில் சம்பவம்

குடிபோதையில் இருந்த மகன் தனது தந்தையை கொலை செய்த சம்பவம் ஒன்று கஹவத்தை பகுதியில் பதிவாகியுள்ளது.

கஹவத்தை-ஹவ்பேவத்த பகுதியை சேர்ந்த 70 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபராக கருதப்படும் உயிரிழந்தவரின் மகன் (40 வயது) கஹவத்தை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கும் அவரது தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதலாக மாறியதாகவும் அதனால் சந்தேக நபர் தனது தந்தையை தாக்கி கொலை செய்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கஹவத்தை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.