பிரபல பாடசாலையொன்றில் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பணமோசடி செய்த நபரொருவர் கைது!

பிரபல பாடசாலையொன்றில் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பணமோசடி செய்த நபரொருவர் கைது!

காலி நகாில் பிரபல பாடசாலையொன்றின் முதலாம் தரத்தில் பிள்ளையொன்றுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ஆறு லட்சம் ரூபா மோசடி செய்த நபரொருவரை காலி காவல் துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

பெந்தோட்டை-மிாிஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்பவர்களோடு நெருங்கிய தொடர்புடையவர் என்று தன்னை அடையாளப்படுத்தியே இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.