
மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்திற்கு பயணத்தடை!
இதேவேளை, மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்திற்கு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இன்று காலை முதல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரூக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள்; கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.