சுற்றுலா நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட உள்ள பகுதி..! காணொளி
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த ஆதிவாசிகள் வாழும் கிராம பகுதி இன்று மீண்டும் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 16ஆம் திகதி முதல் குறித்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருவது தடை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா அச்சம் குறைவடைந்து வரும் நிலையில் மீண்டும் இந்த கிராமத்திற்குள் சுற்றுலா பயணிக்ள் வருவதனை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு விடுத்துள்ள பாதுகாப்பு முறைமைகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் மீண்டும் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.