நாட்டில் இன்று தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களும்...

நாட்டில் இன்று தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களும்...

நாட்டின் சில பகுதிகளில் இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கெவிட்-19 தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவ தளபதி சவேந்ர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய புஜாபிட்டிய காவல்துறை அதிகாரப்பிரிவிற்குட்பட்ட பமுனுகமுவ திவனவத்த கிராம சேவகர் பிரிவும் எஹெலியகொட காவல்துறை அதிகாரப்பிரிவிற்குட்பட்ட மொரகல கிராம சேவகர் பிரிவும் இன்று அதிகாலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை அக்கரைப்பற்று காவல்துறை அதிகாரப்பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று 5, 14 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் அக்கரைப்பற்று நகர எல்லை பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது,

மேலும் பாலமுனை 1, ஒலுவில் 2, அட்டாளைச்சேனை 8 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அக்கரைப்பற்று 8ன் கீழ் 1, 8ன் கீழ் 3 மற்றும் அக்கரைப்பற்று 9 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன