நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் அதிகளவானோர் கொழும்பில் பதிவு!

நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் அதிகளவானோர் கொழும்பில் பதிவு!

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 484 கொவிட்-19 நோயாளர்களுள், உரிய முறையில் அடையாளப்படுத்தப்படாத பகுதிகளைச் சேர்ந்த 55 பேர் அடங்குவதாக கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

121 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவானதாக கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 110 பேரும், காலி மாவட்டத்தில் 30 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 25 பேரும், அம்பாறை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தலா 23 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 20 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 19 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேரும், கேகாலை மாவட்டத்தில் 8 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 7 பேரும் யாழ்ப்பாணம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் தலா 6 பேரும் அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் 5 பேரும், பதுளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் தலா 3 பேரும் கிளிநொச்சி மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் தலா 2 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேநேரம், வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பியிருந்த 5 பேருக்கும் நேற்றையதினம் தொற்றுறுதியானதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.