
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எந்தவொரு நாட்டிற்கும் வழங்கப்போவதில்லை - பிரதமர்
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் முகாமைத்துவம், உரிமை அல்லது பகுதியளவிலான உரிமையை வௌிநாட்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் அநுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலாக, பாராளுமன்றத்தில் இன்று (06) பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.