இன்று நாட்டின் பல பிரதேசங்களில் மழை...!

இன்று நாட்டின் பல பிரதேசங்களில் மழை...!

வடக்கு, கிழக்கு, வடமாத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அநேக பிரதேசங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சபரகமுவ, மத்திய, வயம்ப மற்றும் மேற்கு மாகாணங்களிலும் அநேக பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென அத்திணைக்களம் மேலும் தொிவித்துள்ளது.

மழையுடன் கூடிய காலநிலையின்போது பலத்த காற்று மற்றும் மின்னல் போன்றவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் எச்சாிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.