
தனியார் பேருந்துகளின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று!
தனியார் பேருந்துத் துறை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சில தனியார் பேருந்து சங்கங்கள் இன்று முற்பகல் கூடவுள்ளன.
மாகாண நிர்வாகத்தினால் மாதாந்தம் குறிப்பு கட்டணமாக பணத்தை அறவிடுதல் உட்பட மேலும் சில அறவீடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது