
இன்று அதிகாலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் சில பகுதிகள்..!
நாட்டில் இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலாகும் வகையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய பூஜாபிட்டி காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட பமுனுகம, திவனாவத்த, ஆகிய பகுதிகளும் எஹெலியகொட காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட மொரகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, அக்கறைப்பற்று காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட அக்கறைப்பற்று 05 ஆம் மற்றும் 14 ஆம் இலக்க கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் நகர அதிகாரத்திற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.