கடல் ஆமை முட்டைகளை வைத்திருந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்
கடல் ஆமை முட்டைகளை கைவசம் வைத்திருந்த இரு சந்தேக நபர்களுக்கு இன்றைய தினம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர்களுக்கு ஒரு இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஹம்பாந்தொட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த நபர்கள் கடந்த பெப்ரவரி மாதம் கலமெட்டிய வன பாதுகாப்பு அதிகாரிகளினால் கடல் ஆமை முட்டைகளுடன் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அம்பலந்தொட்டை அக்கரகால்கொட பிரதேசத்தினை சேர்ந்த 30 மற்றும் 35 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இன்றைய தினம் ஹம்பாந்தொட்டை நீதவான் முன்னிலையில் பிரச்சன்னப்படுத்தப்பட்ட போது இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடல் ஆமைகள் உள்நாட்டில் பாதுகாக்கப்பட்ட உயிரனங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.