
அவிசாவளை - அமித்திரிகலையில் இனந்தெரியாத நபர்களால் வர்த்தக நிலையம் உடைப்பு..!
அவிசாவளை அமித்திரிகலை பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்று இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சேதமடைந்துள்ளது.
குறித்த குழுவினர் கைத்துப்பாக்கியினால் தன்னை அச்சுறுத்தியதாகவும் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
காணி பிரச்சினை ஒன்றே இதற்கு காரணம் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.