நாட்டில் மேலும் 255 பேருக்கு கொரோனா...!

நாட்டில் மேலும் 255 பேருக்கு கொரோனா...!

நாட்டில் மேலும் 255 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 45,721 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 6 ஆயிரத்து 989 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 38,000 கடந்துள்ளது.

இன்று மேலும் 445 பேர் குணமடைந்ததை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38262 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த 12 மணித்தியாலங்களில் கிழக்கு மாகாணத்தில் 31 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் மேலும் 7 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மருத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 5 பேருக்கும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இரண்டு பேருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மருதனார்மடம் கொத்தணியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நீர்கொழும்பு வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் பணிபுரியும் தாதி ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் எண்டிஜன் பரிசோதனையிலேயே தொற்றுறுதியாகியுள்ள நிலையில் அவர் ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்