தெரிஞ்சிக்கங்க…பாலில் தேன் கலந்து குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா?

தெரிஞ்சிக்கங்க…பாலில் தேன் கலந்து குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா?

பால் மற்றும் தேனில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகிறது. ஆனால் இது தெரியாமல் மக்கள் அதை சேர்த்து சாப்பிடக் கூடாது என்ற கருத்தை கொண்டுள்ளனர். இந்த கருத்து சரியானதா மேலும் இதன் நன்மை தீமைகளையும் இங்கே தெரிந்து கொள்வோம்.

தேன் மற்றும் பால் இரண்டுமே அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருளாகும்.

​ஆரோக்கிய நன்மைகள்

எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பால் ஒரு சிறந்த கால்சியம் மூலமாகும். இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இதில் பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது. இது இரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒன்றும் கூட.

தேனுடன் பால் கலந்து குடிப்பது உங்க சுவாச பிரச்சனைகளை தடுக்க ஒரு சிறந்த தீர்வாகும்.

பால் மற்றும் தேன் கலந்த சூடான பானம் சுவாசக்குழாய் நோய்த் தொற்றுக்களை எளிதாக்க மற்றும் பாக்டீரியாக்களை கொல்ல உதவுகிறது.

நீங்கள் தொண்டை புண் நோயால் பாதிக்கப்படும் போது இது உங்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.

பால் மற்றும் தேன் கலந்த பானத்தில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால் தொற்று நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடுகிறது.

இது நல்ல குடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவுகிறது. வயிறு சம்பந்தமான எந்த நோயிலிருந்தும் நிவாரணம் பெற இது உதவுகிறது.

தேன் மற்றும் பால் நம் மூளைக்கு ஒரு அமைதியான மற்றும் ஆறுதலான விளைவை கொடுக்கிறது.

படுக்கைக்கு செல்வதற்கு முன்பு இந்த பானத்தை குடிப்பது உங்க தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவி செய்யும்

​எப்படி பயன்படுத்தலாம்?

பயோடெக்னாலஜி தகவல் தேசிய மையம் நடத்திய ஆய்வின்படி, தேன் சூடாகும்போது (> 140 ° C) மற்றும் நெய்யுடன் கலக்கும்போது HMF ஐ உருவாக்குகிறது.

இது சரியான நேரத்தில் விஷமாக செயல்படக்கூடும்.

ஆனால் தேனை பாலில் கலக்கும் போது பானத்தின் உகந்த வெப்பநிலை 140 டிகிரிக்கு குறைவாகவே இருக்கும்.

எனவே தேனை சூடாக்காமல் இருப்பது நல்லது. அப்படி இல்லையென்றால் பாலை சூடுபடுத்தி 10 நிமிடங்கள் குளிர்ந்த பிறகு தேன் கலந்து குடியுங்கள்.

.