
கல்வியியல் கல்லூரியில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான விசேட அறிவிப்பு..!
கல்வியியல் கல்லூரியில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த 3772 பேரை எதிர்வரும் இரண்டு வாரங்களில் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாடசாலை புதிய தவணைக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட நியமனக்கடிதங்கள் கல்வியியல் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கப்படும் நியமனங்களில் ஆயிரம் பேர் தேசிய பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
ஏனையோர் மாகாண பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.