
கடந்த 24 மணிநேரத்தில் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பாதிப்பு
கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 38 கொவிட்19 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் இதை தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்தும் பெறப்பட்ட பி.சி.ஆர், அன்டிஜன் பரிசோதனைகள் மூலமாக மொத்தமாக இது வரைக்கும் கிழக்கு மாகாணத்தில் 1,323 நபர்கள் கொவிட்19 தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளார்கள்.
இந்த 1,323 கொவிட் தொற்றாளர்களில் 539 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதுடன் 802 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் மேலும் 07 மரணங்கள் பதிவாகியுள்ளன.
பிராந்திய ரீதியான பதிவுகளின் படி
திருகோணமலையில் 173,
மட்டக்களப்பில் 264,
அம்பாறையில் 34,
கல்முனை பிராந்தியத்தில் 852 என மொத்தமாக 1,323 கொவிட்19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டார்கள்.