
மீன் பிடிக்க சென்றவரை முதலை பிடித்த சோகம்..!
மட்டக்களப்பு - உப்போடை பகுதியில் மட்டக்களப்பு வாவியில் மீன்பிடிக்க சென்று முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டிருந்தவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு வாவிப்பகுதியில் மீன்பிடிக்கச்சென்றிருந்த புன்னைச்சோலையை சேர்ந்த 48 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் உப்போடையில் உள்ள களப்பு ஒன்றுக்குள் இருந்து மீனவர்களால் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் மேலதி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அண்மைக்காலகமாக மட்டக்களப்பு வாவியில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.