10 மாதங்களின் பின் மீண்டும் திறக்கப்படுகின்றது விமான நிலையங்கள்! வெளிவந்தது உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

10 மாதங்களின் பின் மீண்டும் திறக்கப்படுகின்றது விமான நிலையங்கள்! வெளிவந்தது உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

சுகாதார வழிகாட்டுதல்களின் படி, இந்த மாதம் 21 ஆம் திகதி முதல் விமான நிலையங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக உத்தியோகப்பூர்வமாக முழுவதும் திறக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கட்டுநாயக்க மற்றும் மத்தல விமான நிலையங்கள் சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு வணிக விமானங்களுக்காக திறக்கப்படுகின்றன.

ஜனவரி 23 ஆம் திகதிக்குப் பிறகு வணிக விமானங்களுக்காக படிப்படியாக திறக்கபப்பட்டு மார்ச் மாதம் முழுவதும் திறக்கப்படும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இன்று (05) காலை நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் கூட்டத்தில் அமைச்சர் இதனை விளக்கினார்.

விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர், சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுவரும் நிறுவனங்கள் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவற்றை மீறும் நிறுவனங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கான வாய்ப்பு வழங்கப்படாது என்றும் அமைச்சர் கூறினார்.

மார்ச் 19 அன்று விமான நிலையம் மூடப்பட்டது. அதன் பின்னர் 10 மாதங்களாக சுற்றுலாப் பயணிகள் வரவில்லை. சுற்றுலாத் துறையை மீண்டும் தொடங்க கடந்த ஜூன் முதல் பல்வேறு திட்டங்களை நாங்கள் செய்து வருகிறோம்.

ஜனவரி 23 ஆம் திகதிக்குப் பின் விமான நிலையத்தை சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இப்போது அடையாளம் காணப்பட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாங்கள் தயாராக இருப்போம் என்றார்.