
முகக்கவசம் அணியாத 300 பேருக்கு ரெபிட் எண்டிஜென் பாிசோதனை - இருவருக்கு கொரோனா!
கொழும்பில் முகக் கவசம் அணியாதிருந்த 300 பேருக்கு ரெபிட் எண்டிஜென் பாிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.
இவர்களில் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தொிவித்தார்.