
சுகாதார விதிமுறைகளை மீறி பயணிகளை அழைத்து வரும் நிறுவனங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை!
சுகாதார விதிமுறைகளை மீறி சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் நிறுவனங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தொிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சுகாதாரப் பிாிவினாின் ஒத்துழைப்போடு தயாாிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகளுக்கு அமைய சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் தொிவித்தார்.
எவ்வாறெனினும், குறித்த வழிகாட்டிகளை மீறி யாதேனும் ஒரு நிறுவனத்தினால் சுற்றுலாப் பயணிகள் அழைத்து வரப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு தொிவித்தார்.
சுகாதார விதிமுறைகளுக்கமைய ஜனவாி 23ம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கை விமான நிலையம் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.