
நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனை அடுத்த மாதம் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கைவசம் அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. மலையாளத்திலும் 2 படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர படத்தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
நயன்தாரா ஏற்கனவே 2 முறை காதல் முறிவை சந்தித்து மூன்றாவதாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு உள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.
இந்நிலையில், நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற உள்ளதாகவும் இதற்கான ஏற்பாடுகளில் இரு குடும்பத்தினரும் ஈடுபட்டு உள்ளனர் என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையா? இல்லை இதுவும் வதந்தியா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.