நெடுந்தூர புகையிரத பயணச்சேவைகள் இடம்பெறாது...!
இன்று முதல் சகல தொடரூந்து மார்க்கத்திற்குமான சேவைகள் அதிகரிக்கப்படுவதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய பிரதான மார்க்கத்தில் 64 தொடரூந்து சேவைகளையும், கரையோர மார்க்கத்தில் 74 தொடரூந்து சேவைகளையும், வடக்கு மார்க்கத்தில் 6 தொடருந்து சேவைகளையும், புத்தளம் தொடரூந்து மர்க்கத்தில் 26 தொடரூந்து சேவைகளையும் இந்த வாரம் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் களனிவெளி மார்க்கத்தில் 12 தொடரூந்து சேவைகளும் வடக்கு தொடருந்து மார்க்கத்தில் 6 தொடரூந்து சேவைகளும் இடம்பெறவுள்ளன.
இந்த தொடரூந்து சேவைகள், நேர அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ளதுடன், நெடுந்தூர பயண சேவைகள் தொடர்ந்து இடம்பெறாது எனவும் அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்துள்ளார்.