உக்ரைனில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் விஜயம் செய்ய உள்ள இடங்கள் குறித்த தகவல்..!
கடந்த 28 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த யுக்ரையின் சுற்றுலா பயணிகள் எதிர்வரும் நாட்களில் தம்புள்ளை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.
அவர்கள் நாளைய தினம் பொலன்னறுவை சுற்றுலா திட்டத்திற்கு சொந்தமான பராக்கிரம அரண்மனை வளாகம், தலதா முற்றம், சிவன் ஆலயம், லங்காதிலக விகாரை, கிரி விகாரை மற்றும் கல் விகாரை உள்ளிட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
எனவே நாளை பிற்பகல் 1 மணிக்கு பின்னர் குறித்த இடங்கள் உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட மாட்டாது என அந்த நிதியம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் நாளை மறுதினம் குறித்த சுற்றுலா பயணிகள் சீகிரியாவிற்கு விஜயம் செய்யவுள்ளனர்.
எனவே அன்றைய தினம் குறித்த சுற்றுலா வலயம் நண்பகல் 12 மணி வரை உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட மாட்டாது என மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது