சுமார் 68,000 இலங்கையர்கள் காத்திருப்பு பட்டியலில்...!

சுமார் 68,000 இலங்கையர்கள் காத்திருப்பு பட்டியலில்...!

சுமார் 68,000 இலங்கையர்கள் நாடு திரும்புவதற்காக எதிர்பார்த்து காத்திருப்பு பட்டியலில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மூடக்கம், தனிமைப்படுத்தல், வான்வழி போக்குவரத்தினை இடைநிறுத்தல் ஆகிய நடவடிக்கைகளை சில நாடுகள் அமுல்படுத்தியுள்ள பின்னணிக்கு மத்தியிலும் அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதுவரை 137 நாடுகளில் இருந்து 60 ஆயிரத்து 470 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

அவர்களில் சுமார் 40 ஆயிரம் பேர் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நாடு திரும்பியுள்ளனர்.

ஏனையவர்கள் ஐரோப்பியா, ஆப்ரிக்கா, ஆசிய, மற்றும் லத்தின் அமெரிக்க ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள், சென்னை, மெல்போர்ன், குவைத், டொஹா, டொரென்டோ, சைப்ரஸ் மற்றும் டுபாய் ஆகிய நாடுகளில் இருந்து ஆயிரத்து 400 பேரை நாட்டுக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அத்மிரல் ஜனநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.