அடுத்த சில நாட்கள் ஆபத்தானவை! பொதுமக்களுக்கு எச்சரிக்கை

அடுத்த சில நாட்கள் ஆபத்தானவை! பொதுமக்களுக்கு எச்சரிக்கை

அடுத்த சில நாட்களில் - நாடளாவிய ரீதியில் புதிய கொத்தணிகள் உருவாக கூடும் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இப்புதிய கொத்தணிகள் உருவாகக் கூடும் என்ற அச்சம் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கொழும்பு மாநகரசபை பிரிவிற்குள் கொரோனா பரவல் ஒரளவு குறைவடைந்துள்ளது.

களுத்துறை, பேருவளை, பொல்காவல, மொனராகல, திருகோணமலை, காத்தாண்குடி, மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் நிலைமை மோசமடைகின்றது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றவேண்டும்.

பண்டிகை காலத்தில் பொதுமக்கள் மேல்மாகாணத்தை விட்டு வெளியேறியதன் காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டில் புதிய பரவல்கள் ஆரம்பமாகலாம் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.