நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவல்..!

நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவல்..!

நாட்டில் மேலும் 191 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியதோடு தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்தை கடந்துள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டார்.

அத்துடன், இன்றைய தினம் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்று தொற்றுறுதியானவர்களில் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 83 பேரும் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 562 பேர் குணமடைந்துள்ளனர்.

தொற்று நோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் 36 ஆயிரத்து 717 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

அத்துடன் நாட்டில் இதுவரையில் 44 ஆயிரத்து 167 பேருக்கு கொவிட்-19 தொற்றுதியாகியுள்ளது.

இந்தநிலையில் தொற்றுறுதியான 7 ஆயிரத்து 242 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய மேலும் 71 பேருக்கு நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 71 பேரும் ஆண் கைதிகள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 4 ஆயிரத்த 87 பேருக்கு இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் 3 ஆயிரத்து 347 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 17 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதேவேளை, அலுத்கம பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்விற்கு சென்றிருந்த மேலும் 21 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

பயாகல, களுத்துறை மற்றும் பொத்துவில் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது.

கடந்த 16 ஆம் திகதி அலுத்கம பகுதியில் இடம்பெற்ற திருமணத்தின் மணப்பெண் உள்ளிட்ட 26 பேருக்கு தொற்றுறுதியாகியிருந்தது.

இந்தநிலையில் குறித்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. .

கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் பொலன்னறுவை - கல்லெல்ல மத்திய நிலையத்தில் இருந்து தப்பி சென்ற சிறை கைதிகள் நால்வரையும் கண்டு பிடிப்பதற்கான விசாரணைகள் தொடர்கின்றன.

கடந்த 31 ஆம் திகதி அதிகாலை 5 பேர் கொரோனா சிகிச்சை நிலையத்தில் இருந்து தப்பி சென்றிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் கண்டு பிடிக்கப்பட்டார்.

இந்தநிலையில் சி.சி.ரி.வி காணொளியின் உதவியுடன் ஏனையோரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் பிரதிகாவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.