
கள்ளக்காதலியை பார்க்க சுரங்கம் அமைத்த வாலிபர்: காதலியின் கணவரால் பிடிபட்டதால் பரபரப்பு!
தான் காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெற்றதை அடுத்து அந்த காதலியின் வீட்டிற்கு தன்னுடைய வீட்டில் இருந்து சுரங்கப் பாதை அமைத்த வாலிபர் ஒருவர் காதலியின் கணவரால் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஆல்பர்டோ என்பவர் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் திடீரென அவரது காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகிவிட்டது. ஆனால் திருமணம் ஆகியும் தனது வீட்டிற்கு அருகிலேயே அந்த காதலி தனது கணவருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் தனது காதலியைப் பார்ப்பதற்காக தனது வீட்டிலிருந்து சுரங்கம் தோண்டி அந்த சுரங்கப்பாதை காதலி வீட்டின் பெட்ரூமில் முடிவது போல் அமைத்து இருந்தார். அடிக்கடி இந்த சுரங்கப்பாதை வழியாக சென்று காதலியை சந்தித்து வந்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் தற்செயலாக ஒருநாள் காதயின் கணவர் இந்த கள்ளக்காதலர்களை கையும் களவுமாக பிடித்து விட்டார். தனது மனைவியைப் பார்க்க ஆல்பர்ட்டோ எப்படி தனது வீட்டிற்கு வந்தார் என்பதை அவர் ஆய்வு செய்தபோது தனது வீட்டின் பெட்ரூமில் இருந்து ஒரு சுரங்கப்பாதை செல்வதைப் பார்த்தார். அந்த சுரங்கப் பாதை ஆல்பர்டோ வீட்டில் முடிவதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஆல்பர்டோ தனது கள்ளக்காதலியை பார்க்க சுரங்க அமைத்த விஷயம் அவரது மனைவிக்கே பல மாதங்களாக தெரியாமல் இருந்துள்ளது ஆச்சரியமான ஒன்றாகும்.