திடீரென உயர்ந்த டொலர் பெறுமதி! மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

திடீரென உயர்ந்த டொலர் பெறுமதி! மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (31.12.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 306.29 ஆகவும் விற்பனைப் பெறுமதி 313.83 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதன்படி, பல முக்கிய வணிக வங்கிகளில் டொலரொன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் பின்வருமாறு பதிவாகியுள்ளது.

திடீரென உயர்ந்த டொலர் பெறுமதி! மத்திய வங்கி வெளியிட்ட தகவல் | Dollar Rises On The Last Day Of The Year

மக்கள் வங்கியில் டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 306.53 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 313.29 ஆக பதிவாகியுள்ளது.

கொமர்ஷல் வங்கியில் டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 304.74 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 313.25 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சம்பத் வங்கியில் டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 306.75 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 313.25 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.  

அமானா வங்கியில் டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 308.25 ரூபாவாகவும், 312.25 விற்பனை பெறுமதி ஆகவும் பதிவாகியுள்ளது.