நண்பர்களுடன் புதுவருட கொண்டாட்டம்! பின்னர் நடந்த விபரீதம்

நண்பர்களுடன் புதுவருட கொண்டாட்டம்! பின்னர் நடந்த விபரீதம்

ஹட்டன் தோட்டப் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் புதுவருட கொண்டாட்டத்திற்கு சென்றிருந்த வேளை உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டு பிறக்கவுள்ள நிலையில் புதுவருட விருந்துக்கு சென்ற போதே அவர் உயிரிழந்துள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

2021 புது வருடத்தை முன்னிட்டு நேற்று இரவு 08 மணியளவில் மதுபான விருந்திற்கு சக நண்பர்களோடு வீட்டிலிருந்து சென்ற நிலையில், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இந்நிலையில், அவரை தேடிய போதே தேயிலை மலையில் இறந்த நிலையில் கிடந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் நான்கு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய ஆறுமுகன் குமார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது மதுபான விருந்து முடிந்தவுடன் சகலரும் கலைந்து சென்றுவிட்டதாக அவரது நண்பர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிரழிந்த நபர் மதுபான விருந்து இடம்பெற்ற சில மீட்டர் தூரத்தில் தேயிலை மலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளார். ஹட்டன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு சடலம் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.