
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘திரிஷ்யம் 2’ படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என மோகன்லால் அறிவித்துள்ளார்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் திரிஷ்யம். பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை கொலை செய்த மகளை காப்பாற்ற போராடும் தந்தை பற்றிய கதை. ரூ.5 கோடி செலவில் உருவான இந்த படம் ரூ.75 கோடி வசூல் குவித்தது.
இதன் வெற்றி இந்தியா முழுவதும் அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. திரிஷ்யம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் கமல்ஹாசன், கவுதமி ஆகியோர் நடித்தனர். இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
தற்போது 7 வருடங்களுக்கு பிறகு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். இதிலும் மோகன்லாலே ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனா நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
Georgekutty and his family are coming soon on @PrimeVideoIN#Drishyam2OnPrime #HappyNewYear2021 #MeenaSagar #JeethuJoseph @antonypbvr @aashirvadcine @drishyam2movie #SatheeshKurup pic.twitter.com/5l7cfCdCS3
— Mohanlal (@Mohanlal) December 31, 2020
இந்நிலையில், இப்படத்தின் டீசரை வெளியிட்ட மோகன்லால். இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி இப்படத்தை விரைவில் அமேசான் பிரைமில் வெளியிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னணி நடிகர் ஒருவரின் படம் ஓடிடி-யில் வெளியாக உள்ளது மலையாள திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.