
உரு மாறிய கொரோனா வைரஸ் ஃப்ரான்ஸிலும் கண்டுபிடிப்பு!
தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உரு மாறிய கொரோனா வைரஸ் ஃப்ரான்ஸிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இந்த வைரஸ் ஃப்ரான்ஸில் கண்டறியப்பட்டதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி, வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
501.ஏ2 என்ற உருமாறிய கொரோன வைரஸ், கடந்த டிசம்பர் மாத நடுப்பகுதியில் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரித்தானியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஃப்iரான்ஸிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதுவகை கொரோனா வைரஸை போன்றே இன்னொரு வகையானது என தெரிவிக்கப்படுகிறது.