உலகளாவிய ரீதியில் புதுவருடக் கொண்டாட்டம்!

உலகளாவிய ரீதியில் புதுவருடக் கொண்டாட்டம்!

உலகெங்கிலும் வாழ்கின்ற மக்கள் இன்றைய தினம் 2021ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.

சூரிய உதயத்தின் அடிப்படையில் பசுபிக் தீவான டொங்காவில் முதன்முறையாக 2021ம் ஆண்டு ஆரம்பித்தது.

எனினும் நியுசிலாந்தின் ஒக்லேண்டில் இடம்பெறுகின்ற புத்தாண்டு கொண்ட்டாட்டங்களே பிரதானப்படுத்தப்படுகின்றன.

இந்த முறை உலகின் பல நாடுகளில் வியாபித்திருக்கின்ற கொவிட்19 நோய்ப்பரவல் காரணமாக, கொண்டாட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் நியுசிலாந்தில் கொவிட்19 கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதால், அங்கு வழமைப்போன்ற கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

இலங்கையிலும் புத்தாண்டுக்கான மட்டுப்படுத்தப்பட்ட விசேட மத வழிபாடுகள் நள்ளிரவில் இடம்பெற்றுள்ளன.