கந்தளாய் விமான விபத்து தொடர்பில் ஆராய சீன நிபுணர்களில் உதவியை நாடும் இலங்கை..!

கந்தளாய் விமான விபத்து தொடர்பில் ஆராய சீன நிபுணர்களில் உதவியை நாடும் இலங்கை..!

கந்தளாய் - சூரியபுர பகுதியில் அண்மையில் வான்படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானமை தொடர்பில் ஆராய சீன நிபுணர்களின் உதவிகளை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமானப்படை பேச்சாளர் இதனை எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.

வான்படைக்கு சொந்தமான பீ.டீ.6 ரக பயிற்சி விமானம் கடந்த 15 ஆம் திகதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 23 வயதான விமானி ஒருவர் மரணித்தார்.

குறித்த விமானம் சீன நிறுவனமொன்றினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் இது தொடர்பான விசாரணைகளில் சீன நிபுணர்களின் உதவிகளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வான் படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விமான விபத்து தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடுத்து மாதம் ஆரம்பத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.