
சுற்றுலா பயணிகள் மூவருக்கு கொரோனா..!
அண்மையில் யுக்ரைனில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் குழுவில் மூவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய எதிர்வரும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.