ஸ்ரீலங்காவுக்கு அருகிலான வளிமண்டலத்தில் குழப்பம் - வடக்கு கிழக்கிற்கு எச்சரிக்கை

ஸ்ரீலங்காவுக்கு அருகிலான வளிமண்டலத்தில் குழப்பம் - வடக்கு கிழக்கிற்கு எச்சரிக்கை

ஸ்ரீலங்காவுக்கு அருகிலான வளிமண்டலத்தில் குழப்பகர நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் தென் கிழக்கு கடற்பிரதேசங்களில் அவ்வப்போது காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடிய அச்சுறுத்தல் நிலவுகின்றது.

ஆகவே மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் கடற்றொழிலில் ஈடுபட வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரியொருவர் நேற்று தெரிவித்தார்.

வளிமண்டலத்தில் குழப்பகர நிலை நிலவுவதால் மேற்படி கடற்பரப்பில் மணித்தியாலயத்திற்கு 70 - 80 கிலோ மீற்றர்கள் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுகிறது.

கடலும் அவ்வப்போது கொந்தளிப்பு நிலையை அடைய முடியும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் புத்தளம், கொழும்பு காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்பிலும் மணித்தியாலயத்திற்கு 50 கிலோ மீற்றர்கள் வேகத்தில் காற்று வீசலாம். அதனால் அப்பிரதேச கடற்பரப்பும் அவ்வப்போது கொந்தளிப்பை அடைய முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.