சி.வி.விக்னேஸ்வரனால் என்ன செய்ய முடியும்? சம்பந்தன் கேள்வி

சி.வி.விக்னேஸ்வரனால் என்ன செய்ய முடியும்? சம்பந்தன் கேள்வி

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பை விமர்சிக்கலாம். அதைவிடுத்து தமிழ் மக்களுக்கு அவரால் என்ன செய்ய முடியும்?”

இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அவர் வழங்கியுள்ள நேர்காணலில் மேலும் தெரிவித்ததாவது,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் யாரையும் நாம் விலக்கவில்லை. சிலர் விலகினார்கள். அதற்கான காரணத்தை அவர்கள் இதுவரை கூறவில்லை.

விக்னேஸ்வரனை நானே அரசியலுக்குக் கொண்டு வந்தேன். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால், தற்போது அவர் என்ன செய்கின்றார்?

அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கலாம். அதைவிடுத்து அவரால் என்ன செய்ய முடியும்? கூட்டமைப்பை விமர்சிப்பவர்களினால் தமிழ் மக்களுக்கு எதையும் செய்ய முடியவில்லை.

அவர்கள் ஏன் கூட்டமைப்பில் இருந்து விலகினார்கள் என்று அவர்களுடன்தான் கேட்க வேண்டும். நாம் யாரையும் விலக்கவில்லை. அவர்களை விலகவும் சொல்லவில்லை. விலகியமைக்கான காரணம் ஒருவரும் கூறவில்லை” - என்றார்.