நிவாரண சட்டமூலத்தில் ட்ரம்ப் கைச்சாத்து

நிவாரண சட்டமூலத்தில் ட்ரம்ப் கைச்சாத்து

கொரோனா நிவாரண சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த சட்டத்திற்கிணங்க வருடாந்தம் 75,000 அமெரிக்க டொலருக்கும் குறைவான வருமானம் பெறும் அமெரிக்கர்களுக்கு 600 அமெரிக்க டொலர் நிதி வழங்கப்படவுள்ளது.

இந்த நிவாரணத் தொகை 2000 அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கப்பட வேண்டுமென தெரிவித்த ட்ரம்ப், ஆரம்பத்தில் சட்டமூலத்தில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்தார்.

டொனால்ட் ட்ரம்பின் இந்த தாமதத்தினால் மில்லியன் கணக்கான வேலையற்ற அமெரிக்கர்கள் பாதிப்படையவிருந்தனர்.

900 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிவாரண பொதிக்கு சில மாதங்கள் தொடர்ந்த பேச்சுவார்த்தைகளின் பின்னர் காங்கிரஸ் ஒப்புதல் அளித்தது.

உலகளவில் கொரோனா தொற்றுக்குள்ளான நாடுகளில் பாரிய பொருளாதார பின்னடைவை அமெரிக்கா எதிர்நோக்கி வருகிறது.

இதனால் அமெரிக்கர்கள் பலர் தமது தொழிலை இழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

14 மில்லியன் வேலையற்ற அமெரிக்கர்கள் நிவாரண கொடுப்பனவை பெறுவதில் காணப்பட்ட சிக்கல் தற்போது நீங்கியுள்ளது