மாத்தளையில் காலை கண்டெடுக்கப்பட்ட 10 சடலங்கள் -தீவிர விசாரணையில் பொலிஸார்

மாத்தளையில் காலை கண்டெடுக்கப்பட்ட 10 சடலங்கள் -தீவிர விசாரணையில் பொலிஸார்

மாத்தளை கலேவெவ பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள 10 நாய்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பல பகுதிகளில் நாய்களின் சடலங்களை கண்ட மக்கள் பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்துள்ளனர். கலேவெவ பிரதேசத்தில் உள்ள பண்ணையொன்றை நடத்திச் செல்லும் சிலரினால் குறித்த நாய்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கடந்த காலங்களிலும் குறித்த பண்ணை உரிமையாளர்களினால் நாய்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.அத்துடன் குறித்த பண்ணையில் உள்ள நபர்களினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதேச மக்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட நாய்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கலேவெவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாதவாறு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்த நாய்களின் உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த நாய்களின் உரிமையாளர்களை இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யுமாறு கலேவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.