நுளம்புவலை தொங்கவிடும் கம்பியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் - தீவிர விசாரணையில் பொலிஸார்

நுளம்புவலை தொங்கவிடும் கம்பியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் - தீவிர விசாரணையில் பொலிஸார்

நுளம்பு வலை தொங்கவிடும் கம்பியில் அமைக்கப்பட்ட இரும்பு கம்பியில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த 12 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்

பிலியந்தலை பகுதியில் நேற்றையதினம் (27) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தை வேலைக்கும் , தாய் பொருட்கள் வாங்க வர்த்தக நிலையம் சென்ற நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது 6 வயதான சகோதரியுடன் குறித்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

வீட்டிற்கு வருகை தந்த தாய், மகனை காணவில்லை என தேடிய போதே, மகன் துணியொன்றில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

மகனை மீட்ட தாய், வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும் வைத்தியசாலையில் சிறுவனை பரிசோதித்த வைத்தியர்கள், சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மர்மமாக சிறுவன் உயிரிழந்தமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக பிலியந்தலை பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.