
தென்னாப்பிரிக்காவில் 10 இலட்சம் பேருக்கு கொரோனா..!
தென்னாபிரிக்காவில் கொவிட்-19 தொற்றுறுதியானோரின் எண்ணிக்கை 10 இலட்சத்தைக் கடந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் தென்னாபிரிக்காவில் 9 ஆயிரத்து 502 பேருக்கு தொற்றுறுதியானதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கொவிட்-19 தொற்றுறுதியானோர் எண்ணிக்கை 10 இலட்சத்து 4 ஆயிரத்து 413 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, சர்வதேச ரீதியில் 10 இலட்சம் கொவிட்-19 நோயாளர்களை அடையாளம் காணப்பட்ட 18 ஆவது நாடாக தென்னாபிரிக்கா பதிவாகியுள்ளது.
வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் தென்னாபிரிக்காவில் கடந்த தினங்களில் கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், ஜனாதிபதி சிறில் ரமபோஸா, வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ளன.