கசுன் ராஜித்தவுக்கு டெஸ்ட் தொடர் கைநழுவியது...!

கசுன் ராஜித்தவுக்கு டெஸ்ட் தொடர் கைநழுவியது...!

இலங்கை மற்றும் தென்னாபிாிக்க அணிகளுக்கிடையில் சென்சூாியன் மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 03வது நாள் இன்றாகும்.

நேற்று இரண்டாம் நாள் முடிவின் போது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிாிக்க அணி 04 விக்கட் இழப்பிற்கு 317 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதேவேளை இன்றைய தினம் கிடைக்கவுள்ள புதிய பந்தில் ஏற்ற உத்திகளைக் கையாண்டு தென்னாபிாிக்க அணியின் விக்கட்டுக்களை வீழ்த்துவதற்கு திட்டமிட்டிருப்பதாக சகல துறை வீரரான தசுன் சாணக்க தொிவித்துள்ளார்.

நேற்று உபாதைக்குள்ளான வேகப் பந்து வீச்சாளர் கசுன் ராஜித்தவுக்கு இப்போட்டித் தொடர் கைநழுவி இருப்பதாக கிாிக்கட் தகவல் வட்டாரங்கள் தொிவிக்கின்றன.

வேகப்பந்து வீச்சாளரான கசுன் ராஜித்த மற்றும் தனஞ்சய டி சில்வா உபாதைக்குள்ளானமை தொடர்பில் கருத்துத் தொிவித்த தசுன் சாணக்க கூறியதாவது, இவர்களின் ஒத்துழைப்பு தமது அணிக்கு கிடைக்காமை மிகப்பொிய குறை எனக் கருதினார்.