வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்குப் பின்னர் 7,000 பட்டதாரிகள் செயற்திட்ட உதவியாளர் பதவிக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் தொழில்வாய்ப்புக்களுக்காக காத்திருக்கும் நிலையில் மேலும் 7000 பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

ஏற்கனவே 47,000 பட்டதாரிகளுக்கு அண்மையில் செயற்திட்ட உதவியாளர் நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக மேலும் 7,000 பட்டதாரிகள் தேர்தலுக்குப் பின்னர் குறித்த பதவிக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

தேர்தல் முடிந்து இருவாரங்களுக்கு பின் அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.