யாழ் கொழும்புத்துறையில் இராணுவத்தின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய வாள் -இருவர் கைது

யாழ் கொழும்புத்துறையில் இராணுவத்தின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய வாள் -இருவர் கைது

யாழ்ப்பாணம் கொழும்புத்துறைப்பகுதியில் வாள் வைத்திருந்தனர் எனத் தெரிவித்து இருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்

கொழும்புத்துறைப்பகுதியில் இன்றையதினம் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதலில் வீடொன்றிலிருந்து வாள் ஒன்றை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து இந்த வாள் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட இருவரையும் மீட்கப்பட்ட வாளையும் இராணுவத்தினர் விசேட அதிரப்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.