இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் கொவிட்-19 தொற்றுறதியானோரின் எண்ணிக்கை ஆயிரத்து 998 ஆக அதிகரித்துள்ளது.

 

இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் 7 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

 

அவர்கள் அனைவரும், அமெரிக்காவில் இருந்து நாடுதிரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இதேநேரம், கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 14 பேர் குணமடைந்துள்ளனர்.

 

இதற்கமைய, நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 562 ஆக அதிகரித்துள்ளது.

 

இந்த நிலையில், 425 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நாட்டில் இதுவரை ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

 

கொரோனா வைரஸ் உலக பரவல் நோயினால் நாடு திரும்ப முடியாமல் பிரித்தானியாவில் சிக்கியிருந்த 154 இலங்கையர்கள் இன்று நாட்டுக்கு மீள அழைத்துவரப்பட்டனர்.

 

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

 

இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்றினால் நாடுதிரும்ப முடியாமல் மாலைதீவில் சிக்கியிருந்த 169 இலங்கையர்கள், சிறப்பு விமானம் மூலம் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

 

மாலேயிலிருந்து பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் யு.எல்.4102 ரக விமானத்தில், இன்று பிற்பகல் அவர்கள் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

 

அத்துடன், சிங்கப்பூரிலிருந்து 94 இலங்கையர்கள் நாட்டுக்கு மீள அழைத்துவரப்பட்டனர்.

 

குறித்த மூன்று நாடுகளில் இருந்து நாடுதிரும்பியவர்களையும், விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்திற்கான எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.