அமைச்சர் மகிந்த அமரவீர மேற்கொண்டுள்ள அதிரடி தீர்மானம்

அமைச்சர் மகிந்த அமரவீர மேற்கொண்டுள்ள அதிரடி தீர்மானம்

நுரைச்சோலை புதிய அனல் மின் நிலைய நிர்மாணம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு 17.5 மில்லின் ரூபாய் ஒதுக்கி பிரத்தியேகமாக சட்டத்தரணிகளை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை மேற்கொண்ட தீர்மானத்தை அமைச்சர் மகிந்த அமரவீர இரத்து செய்துள்ளார்.

மின்சார சபையின் சட்ட பிரிவிற்குள் சட்ட அதிகாரிகள் காணப்படுகின்ற நிலையில் அவர்களின் சேவை பெ்றறுக்கொண்டு புதிய அனல் மின் நிலையத்திற்காக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லுமாறும் அமைச்சர் இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.