
குடும்பஸ்தர் குத்திக்கொலை! புத்தூரில் பட்டப்பகலில் பயங்கரம்
யாழ்ப்பாணத்தில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
புத்தூர் சந்திப்பகுதியில் இன்று காலை வீதியால் சென்ற நபரை இனம்தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டார்.
ஐயாத்துரை மோகனதாஸ் (வயது-47) என்ற குடும்பஸ்தரே கத்திக்குத்துக்கு இலக்கானார். அவர் காயத்துடன் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.