மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது,
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு. வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.
சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மழையுடனான வானிலை நிலவக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது,
சில பகுதிகளில் 50 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது