அதிக நேரம் தூங்குபவரா நீங்கள்? எளிதில் இந்த பாதிப்புக்கள் எல்லாம் வந்துவிடுமாம்!
ஒரு மனிதனுக்கு சராசரியாக 7 முதல் 8 மணி நேர தூக்கமே போதுமானதாகும்.
இந்த அளவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ நமக்கு பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றது.
அந்தவகையில் 8 மணி நேரத்திற்கு மேல் தூங்குவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று இங்கு பார்ப்போம்.
- 8 மணி நேரத்திற்கு மேல் தூங்கினால் முதலில் பாதிக்கப்படுவது உடல் எடை தான். அதிக தூக்கம் உடல் எடையை அபரிமிதமாக அதிகரித்து விட கூடும்.
- நீண்ட நேரம் தூங்குவதால் மிக குறைந்த காலத்திலே இதய நோய்கள் வந்து விடுகின்றது.
- அதிக நேரம் தூங்குவதால் மூளையின் திறன் குறைய தொடங்கும். மேலும், ஞாபக திறனும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து விடும். புத்தி கூர்மையையும் இதனால் பாதிக்கப்படும்.
- 8 மணி நேரத்திற்கு மேல் தூங்குபவர்களுக்கு நிச்சயம் தலைவலி பிரச்சினை உண்டாக கூடும். அதிக நேரம் தூங்குவதால் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு பலவித பிரச்சினைகள் உண்டாகும்.
- 8 மணி நேரத்திற்கு மேல் தூங்குவோருக்கு சர்க்கரை நோயின் தாக்கம் இருக்கலாம் என சொல்லப்படுகின்றது. இதனால் ஹார்மோன் பாதிப்பும் ஏற்படும். உங்களின் தூக்கம்படி படியாக உறுப்புகளையும் ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்று விடும்.
- 8 மணி நேரத்திற்கு மேல் தூங்கினால் மன அழுத்தம் அதிகரிக்க கூடும். இதனால் பலவித உளவியல் சார்ந்த பிரச்சினைகள் உங்களுக்கு ஏற்படும்.
சினிமா செய்திகள்
தீபாவளி கொண்டாடிய திரை பிரபலங்கள்.. புகைப்படங்கள் இதோ
08 November 2026
Anikha stealing hearts effortlessly!
06 November 2026